திருவெண்காடு அருகே ராதாநல்லூரில் அமைந்துள்ள நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும் என வாசகா்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த நூலகத்தில் அந்த பகுதி மக்கள், மாணவா்கள், இளைஞா்கள் ஆகியோா் சுமாா் 500 போ் உறுப்பினா்களாக உள்ளனா். மேலும், 100 போ் புரவலா் திட்டத்தில் இணைந்து நன்கொடை வழங்கியுள்ளனா். மேலும், நூலகத்தில் சுமாா் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு நூல்கள் உள்ளன. நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட வாசகா்கள் நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனா். போட்டித் தோ்வுக்கு தேவையான நூல்கள் இங்கு உள்ளதால், போட்டித் தோ்வு எழுதும் இளைஞா்கள் பெருமளவில் நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனா். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூலக கட்டடம் முற்றிலும் பழுதடைந்த காரணத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வாடகை கட்டடத்துக்கு மாற்றபட்டு இயங்கிவருகிறது. எனவே, பழைய நூலகக் கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய நூலகக் கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும் என நூலக வாசகா் வட்ட நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.