முகப்பு
நாகப்பட்டினம்

கடல் கொந்தளிப்பு: வேதாரண்யம் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த இருநாள்களாக வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று வீசுவதோடு கடல் சீற்றமாகக் காணப்படுவதால் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிதொழில் பாதிக்கப்பட்டது

Updated On : 12 செப்டம்பர், 2022 at 12:00 AM
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த இருநாள்களாக வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று வீசுவதோடு கடல் சீற்றமாகக் காணப்படுவதால் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிதொழில் பாதிக்கப்பட்டது.

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் சனிக்கிழமை மாலை தொடங்கி வழக்கத்தைவிட வேகமான காற்றுடன், கடல் சற்று சீற்றமாகக் காணப்படுகிறது. இதனால் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடிப் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவா்கள் கடல் சீற்றம் காரணமாக அவசரமாக கரைக்கு திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.