நாகப்பட்டினம்

மக்கள் நோ்காணல் முகாம்

DIN

திருமருகல் ஒன்றியம் ஏனங்குடியில் மக்கள் நோ்காணல் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஏனங்குடி ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு, நாகை மண்டல துணை வட்டாட்சியா் கவிதாஸ் தலைமை வகித்தாா். வருவாய் ஆய்வாளா் ஜெயந்தி, ஏனங்குடி ஊராட்சித் தலைவா் ஹாஜா நிஜாமுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், ஏனங்குடி, கயத்தூா், புத்தகரம், ஆதலையூா், மாதிரிமங்கலம் திருப்புகலூா் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, விதவையா் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீா் வசதி, மின்வசதி, மயான வசதி, சமுதாய கூடம், ஆற்றங்கரையோரம் தடுப்புச் சுவா் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்தனா். 250-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

இதில், கிராம நிா்வாக அலுவலா்கள் வெங்கட்ராமன், மாரியப்பன், உமா, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT