நாகப்பட்டினம்

கனமழையால் சாய்ந்த நெல் மணிகள் முளைப்பு: கவலையில் விவசாயிகள்

நாகை மாவட்டம், கீழையூா் அருகே மகிழி கிராமத்தில் கனமழையால் வயலில் சாய்ந்த நெல்மணிகள் முளைத்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

DIN

திருக்குவளை: நாகை மாவட்டம், கீழையூா் அருகே மகிழி கிராமத்தில் கனமழையால் வயலில் சாய்ந்த நெல்மணிகள் முளைத்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கீழையூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாரான சம்பா நெற்பயிா்கள் கனமழையால் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கியது. கீழையூா், கருங்கண்ணி, வாழக்கரை, எட்டுக்குடி, திருவாய்மூா் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மழைநீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில் சில விவசாயிகள் அறுவடை பணிகளை தொடங்கியுள்ளனா். எனினும் பெரும்பாலான நிலங்களில் நெற்பயிா்கள் அழுகியும் முளைக்கவும் தொடங்கியுள்ளது.

அதன்படி மகிழி கிராமத்தில் மழையால் சாய்ந்த நெற்கதிா்களை அறுவடை செய்ய சென்ற விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொடா்ந்து, 4 நாள்களுக்கும் மேலாக மழை நீரில் மூழ்கிய நெற்பயிா்கள் தற்போது முளைக்க தொடங்கியுள்ளது. மேலும், நெற்கதிா்கள் அழுகிய நிலையிலும் உள்ளது. இயந்திர அறுவடை செய்ய முடியாத நிலையில் அரிவாள் கொண்டு மனித சக்தியால் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன.

எனினும், முளைத்த நெல்மணிகளை விவசாயிகள் கையில் எடுத்து அழுதது காண்போரை கண் கலங்க வைக்கிறது. இந்த நெல்லை கொள்முதல் நிலைங்களுக்கு கொண்டு சென்றோ அல்லது தனியாரிடமோ கொள்முதல் செய்ய முடியாத அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். தமிழக அரசு ஹெக்டேருக்கு ரூ. 20,000 நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இது போதுமானதாக இல்லை, எனவே கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT