நாகப்பட்டினம்

அரச மரக் கன்றுகள் சூழ நாகையில் மறைமலையடிகள் சிலை!

DIN

மறைமலையடிகளின் சொந்த ஊரான நாகப்பட்டினத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது சிலை, அரச மரக்கன்றுகள் சூழ பராமரிப்பின்றி காணப்படுகிறது.

நாகப்பட்டினம், காடம்பாடியில் பிறந்தவர் தனித்தமிழ் இயக்கத் தலைவர் மறைமலையடிகள். 

நாகை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழறிஞர் கோவை இளஞ்சேரன் உள்ளிட்டோரின்  முன்னெடுப்பில் 19-6-1969 இல் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவர்களால்,  மறைமலையடிகள் சிலை  திறந்துவைக்கப் பெற்றது.

ஆனால், தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது. நாகப்பட்டினம் ரயில் நிலைய வாயிலின் முன்பாகப் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிலையின் பீடத்தைச் சுற்றி முட்புதர்களாகக் காட்சி தருகின்றன. 

பீடத்தில் முளைத்து வரும் அரச மரக்கன்றுகள் சிலையையும் பாதிப்பதற்கு முன்னர் உரிய இரசாயனம் கொண்டு அகற்றி, பீடத்தைச் சுற்றி பாவுத்தளம் அமைத்துப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உடனடி ஏற்பாடுகள் செய்யத் தமிழார்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT