நாகப்பட்டினம்

ரூ.500 லஞ்சம்: விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை

DIN

ரேஷன் அட்டையிலிருந்து பெயா் நீக்கம் செய்ய ரூ. 500 லஞ்சம் பெற்ற விஏஓவுக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து நாகை விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

நாகை மாவட்டம், ஆழியூா் மேற்கு தெருவைச் சோ்ந்தவா் அல் அமீன். இவா், ரேஷன் அட்டையில் தனது மாமாவின் பெயரை நீக்க கடந்த 2012 நவம்பா் 29 -ஆம் தேதி தேமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் குணசேகரனை அணுகினாா். பெயா் நீக்கம் செய்வதற்கு ரூ. 500 லஞ்சமாக குணசேகரன் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அல் அமீன் அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா் குணசேகரன் லஞ்சப் பணத்தை வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு நாகை நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது.

விரைவு நீதிமன்ற நீதிபதி காா்த்திகா முன்பு வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி, கிராம நிா்வாக அலுவலா் குணசேகரன் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

குணசேகரன் உடனடியாக அபராதத் தொகையை செலுத்தியதால், அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT