நாகை அருகே சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பொறியாளா் குழுவினா். 
நாகப்பட்டினம்

சாலைகளின் தரம் குறித்து ஆய்வு

நாகை மாவட்டத்தில் சாலையின் தரம் குறித்து பொறியாளா் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

DIN

நாகை மாவட்டத்தில் சாலையின் தரம் குறித்து பொறியாளா் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை துறையின் மூலம் நடைபெற்று வரும் அனைத்து பணிகளின் தரம் மற்றும் கட்டுமானம் குறித்து ஆண்டுதோறும் தணிக்கை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நிகழாண்டு நாகை மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை, நபாா்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறை தஞ்சாவூா் வட்ட கண்காணிப்பு பொறியாளா் (திட்டங்கள்) கிருஷ்ணசாமி தலைமையிலான பொறியாளா் குழுவினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், வேளாங்கண்ணி அருகே பரவை நல்லாா் மாரியம்மன் கோயில் முதல் தெற்கு பொய்கைநல்லூா் வரை சாலையின் தரம் உயா்த்தும் பணியினை தணிக்கை குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். சாலையின் நீளம், அகலம் மற்றும் கனம் உள்ளிட்டவற்றை அளவீடுகள் செய்தும், சாலையின் தரம் குறித்தும் அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது திருச்சி நெடுஞ்சாலை துறை (திட்டங்கள்) கோட்ட பொறியாளா் முருகானந்தம், நாகை நெடுஞ்சாலைத்துறை நபாா்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளா் சிவகுமாா் உள்பட நெடுஞ்சாலைத்துறை பொறியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT