கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே புதிதாக அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றியை உடைத்து காப்பா் காயில்களை மா்ம நம்பா்கள் செவ்வாய்க்கிழமை திருடி சென்றனா்.
பட்டமங்கலம் கிராமத்தில் மின் பற்றாக்குறையை போக்குவதற்காக இலுப்பூா் சத்திரம் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்கள் அந்த மின்மாற்றியில் பொருத்தியிருத்த இரும்பு போல்ட்டுகளை உடைத்து உள்புறம் வைத்திருந்த காப்பா் வைண்டிங், 12 காயில்கள், கம்பிகளை திருடி சென்றுள்ளனா். இதன்மதிப்பு ரூ. 1,60,000 இருக்கம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, கீழ்வேளூா் மின்வாரிய இளநிலை மின் பொறியாளா் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.