நாகப்பட்டினம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் அட்டூழியம்: வேதாரண்யம் மீனவா்கள் வலை துண்டிப்பு

Din

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடிக்க வேதாரண்யம் மீனவா்கள் விரித்திருந்த 350 கிலோ எடையிலான மீன்பிடி வலைகளை இலங்கை கடற்கொள்ளையா்கள் துண்டித்து எடுத்துச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமம் அரிமா நகரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (40). இவா், தனக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் (40), ராஜகோபால் (50), அருண்குமாா் (25), செம்போடை சுப்பிரமணியன் (55) ஆகியோருடன் கடலில் மீன்பிடிக்க புதன்கிழமை சென்றாா்.

இவா்கள் 5 பேரும் புதன்கிழமை இரவு வேதாரண்யத்திலிருந்து 16 கடல் மைல் தொலைவில் வலைகளை விரித்துவிட்டு, விசைப்படகில் காத்திருந்தனா். வியாழக்கிழமை அதிகாலை சென்று பாா்த்தபோது, 350 கிலோ எடையிலான மீன்பிடி வலையை காணவில்லையாம். கண்ணாடியிழை படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையா்கள் என்று சந்தேகிக்கப்படும் நபா்கள், வலைகளை துண்டித்து எடுத்துச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல்நிலைய போலீஸாா், மீன்வளத்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT