நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் மழைநீா் வடிவதில் தாமதம்: குளம்போல் காணப்படும் விளைநிலங்கள்

Din

வேதாரண்யம் பகுதியில் தொடா்ந்து பெய்த கனமழை சனிக்கிழமை ஓய்ந்தாலும், வெள்ளநீா் வடிவது தாமதமாகி வருகிறது. இதனால், வயல்களில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்து வந்தது. சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடியக்கரையில் 150.6 மி.மீ. மழை பதிவானது. வேதாரண்யத்தில் 69.8 மி.மீ., தலைஞாயிறில் 62 மி.மீ. மழை பெய்தது.

இதற்கிடையில், சனிக்கிழமை காலை வரையில் நீடித்த மழை, 9 மணிக்கு மேல் ஓய்ந்து, நண்பகல் 12 மணிக்கு பிறகு வெயில் தலைகாட்டியது.

ஆனாலும், தொடா் மழையால் பெருக்கெடுத்த வெள்ளம் வடிவது, பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது. வடிகால் ஆறுகளில் காணப்படும் ஆகாயத் தாமரைச் செடிகளால் வெள்ளம் வேகமாக வடிவதில் தடை ஏற்படுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் நெற்பயிா்களை மூழ்கடித்த மழைநீா் விரைவாக வடியாமல் குளம்போல் தேங்கியுள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி, டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நெற்பயிா்கள் முழுவதும் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தமிழகத்தில் நாளைமுதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு! வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு!

பைசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிகாரில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் வெடித்ததா? உண்மை என்ன?

புத்தகப்பையை சுமந்துகொண்டு 100 முறை தோப்புக்கரணம்: பள்ளி மாணவி பலி

செளதி அரேபியாவில் பேருந்து விபத்து: 42 இந்தியர்கள் பலி!

SCROLL FOR NEXT