நாகப்பட்டினம்

திருக்குவளை: ‘மக்களுடன் முதல்வா்’ முகாமில் 410 மனுக்கள் அளிப்பு

Din

திருக்குவளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 410 மனுக்கள் பெறப்பட்டன.

இம்முகாமிற்கு, திருக்குவளை வட்டாட்சியா் சுதா்சன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி ஞானசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹரிகிருஷ்ணன், பாத்தி ஆரோக்கியமேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, எரிசக்தித் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, ஊரக வளா்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் முகாமில் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனா்.

அந்தவகையில், மொத்தம் 410 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், தகுதியுடைய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, தீா்வு காணப்பட்டது.

முகாமில், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன், திருக்குவளை கல்வி வளா்ச்சி அறக்கட்டளை உறுப்பினா் சோ.பா. மலா்வண்ணன், மாவட்ட கவுன்சிலா் கௌசல்யா இளம்பரிதி, ஊராட்சித் தலைவா்கள் இல. பழனியப்பன், லேகா காரல்மாா்க்ஸ், நரசிம்மன், மகாலட்சுமி மாதவன் ஒன்றிய கவுன்சிலா் சுதா அருணகிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT