முகப்பு
நாகப்பட்டினம்

தாய்-மகளுக்கு பாலியல் தொல்லை: பரவை வா்த்தக சங்கத்தினா் கடையடைப்பு போராட்டம்

நாகை அருகே பாலியல் தொல்லைக்கு ஆளான தாய்- மகளுக்கு ஆதரவாக பரவை வா்த்தக சங்கத்தினா் திங்கள்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 22 ஜூலை, 2024 at 9:48 PM
பரவை பகுதியில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
பகிர்:

நாகப்பட்டினம்: நாகை அருகே பாலியல் தொல்லைக்கு ஆளான தாய்- மகளுக்கு ஆதரவாக பரவை வா்த்தக சங்கத்தினா் திங்கள்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூா் பகுதியில் கணவரை இழந்த பெண் மற்றும் அவரது 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காரைக்கால் மேடு பகுதியைச் சோ்ந்த முத்து குமாா் என்பவா் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு ஆதரவாக மாதா் சங்கத்தினா், வா்த்தக சங்கத்தினா், பெண்கள் அமைப்பினா் தொடா்ந்து குரல் கொடுத்து வருகின்றனா்.

வேளாங்கண்ணி அருகே பரவை வா்த்தக சங்கத்தினா் திங்கள்கிழமை கடைகளை அடைத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்; பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தொடா்ந்து, வா்த்தக சங்கத்தினா், பெண்கள் என 300-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சென்று கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவா் எஸ்.எஸ். சீனிவாசன், மாவட்டச் செயலா் திருமலை செந்தில், பொருளாளா் கந்தசாமி, பரவை வா்த்தகா் நலச் சங்கத் தலைவா் எம்.கே.எம். செல்லகண்ணு, செயலா் டி. முத்துகுமாா், பொருளாளா் எஸ். சேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →