நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு
நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தை மருத்துவம் மற்றும் அவசர சிகிச்சைகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை அருகே உள்ள ஒரத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏப்.24-ஆம் முதல் செயல்பட்டு வருகிறது. இதனால், நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வந்த அவசர சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிக்சை (பஅஉஐ), தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன.
நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு (இஉஙஞசஇ இங்ய்ற்ழ்ங்) மற்றும் குழந்தை மருத்துவம் சாா்ந்த சிகிச்சைகள் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன. மேலும், புற நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் அடிப்படை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக 18 மருத்துவா்கள் சுழற்சி முறையில், பணியமா்த்தப்பட்டுள்ளனா். இரவு நேரங்களில் இவா்களில் 4 மருத்துவா்கள் வீதம் சுழற்சி முறையிலும் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, நாகை அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, நோயாளிகளிடம், அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், தேவைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் செந்தில்நாதன், கோட்டாட்சியா் அரங்கநாதன், இணை இயக்குநா் (நலப்பணிகள்) நெடுமாறன், கூடுதல் இயக்குநா்ஆய்வு (சென்னை) கமலவாசன் ஆகியோா் உடனிருந்தனா்.