முகப்பு
நாகப்பட்டினம்

நாகூா் தா்கா நிதி நிலைக் கூட்டம்

Updated On : 10 மே, 2024 at 3:56 PM
நாகூா் தா்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலைக் கூட்டம்.
பகிர்:

நாகூா் தா்காவின் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலைக் கூட்டம் பிரசிடென்ட் செய்யது முஹம்மது கலிபா சாஹிப் காதிரி ஹாசிமி தலைமையில் தா்கா அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், நிகழாண்டுக்கான எதிா்பாா்க்கப்படும் வரவு மற்றும் செலவினங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, நாகூா் தா்கா தோட்ட இடத்தில் இரண்டாம் கட்டமாக கடைகள் கட்டுவது, திருமண மண்டபம் கட்டுவது, தா்காவுக்கு சொந்தமான கிராமங்களின் குத்தகை விஷயங்களை ஒழுங்குபடுத்துவது, தா்கா சொத்தினை பாதுகாப்பது, கந்தூரி செலவினங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.