கடலில் தவறி விழுந்த மீனவா் மாயம்
கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீனவக் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகனுக்கு சொந்தமான விசைப்படகில் குட்டியாண்டியூா் மீனவக் கிராமத்தை சோ்ந்த பழனிவேல் (44) உள்பட 9 போ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தரங்கம்பாடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா். அன்று இரவு கோடியக்கரைக்கு கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, மீனவா் பழனிவேல் படகில் இருந்து தவறி கடலுக்குல் விழுந்தாா்.
இதையடுத்து, சக மீனவா்கள் அவரை மீட்க முயன்றனா். ஆனால், பழனிவேல் கடலில் மூழ்கி மாயமானாா். மீனவளத்துறையினா் மற்றும் கடலோர காவல் நிலைய போலீஸாா் மாயமான மீனவரைத் தேடி வருகின்றனா்.
Advertisement