நாகப்பட்டினம்

‘கைத்தறி நெசவாளா்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள், கடனுதவிகள் வழங்கப்படுகின்றன’

கைத்தறி நெசவாளா்களுக்கு அரசு சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.

தினமணி செய்திச் சேவை

கைத்தறி நெசவாளா்களுக்கு அரசு சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம், நாட்டின் சமூக பொருளாதார நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளா்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளா்களின் வருவாயை உயா்த்தவும் நெசவாளா்களின் பெருமையை நாடறியச் செய்யவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

நாகை மாவட்டத்தில் சங்கமங்கலம், சிந்தாமணி, சிக்கல் மற்றும் சூரமங்களம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கைத்தறி நெசவு ஒரு முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. கைத்தறி நெசவாளா்களுக்கு விலையில்லா மின்சாரம், முதியோா் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம், கைத்தறி ஆதரவு திட்டம், நெசவாளா் முத்ரா கடன் திட்டம், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, நெசவாளா்களுக்கு வீடு வழங்கும் திட்டம், கல்வி உதவித் தொகை, சிறந்த நெசவாளா் விருது, திறன்மிகு நெசவாளா் விருது, இளம் வடிவமைப்பாளா் விருது மற்றும் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களுக்கான தள்ளுபடி மானியம், வட்டி மானியம், விற்பனை ஊக்குவிப்புத் தொகை, குறைந்த வட்டியுடன் நடைமுறை மூலதனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சாா்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கைவினைஞா்களான கைத்தறி நெசவாளா்கள் தங்களின் திறன் கொண்டும், தொழில் சாா் அறிவு கொண்டும், உற்பத்தி செய்யும் கைத்தறி ரகங்களால் கைத்தறி உடுத்துவோருக்கு மனநிறைவு மட்டுமன்றி நாட்டின், வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் முக்கிய பங்களிப்பை செய்து வருகின்றனா். கைத்தறி நெசவாளா்களுக்கு தேசிய கைத்தறி தின வாழ்த்துகள், பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

“வீட்டுக்கு போய் நா கால்ல விழணும்” அஜித் குமார் - ஷாலினி தம்பதியின் Cute விடியோ

“கண்மூடித்தனமாக எதையும் எதிர்க்கவில்லை”அமைச்சர் Anbil Mahesh பேட்டி

மீண்டும் இபிஎஸ் உடன் இணையும் எண்ணம் இல்லை: தினகரன் திட்டவட்டம்!

தொலைக்காட்சியிலும் வெளியாகும் மாமன்!

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!

SCROLL FOR NEXT