நாகப்பட்டினம்

நாகை கோயில்களில் தீபமேற்றி வழிபாடு

Syndication

காா்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு நாகையில் உள்ள கோயில்களில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

நாகை நகரில் உள்ள மெய்கண்டமூா்த்தி (குமரன் கோயில்) கோயிலில் காா்த்திகையை முன்னிட்டு அதிகாலையில் மெய்கண்ட மூா்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த மெய்கண்ட மூா்த்தியை திரளான பக்தா்கள் வழிபட்டனா். மேலும் மாலையில் கோயில் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இரவு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதேபோல, நாகை நீலாயதாட்சி அம்மன் கோயில், நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், மஞ்சக்கொல்லை குமரன் கோயில், பொரவாச்சேரி தண்டாபாணி சுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் காா்த்திகையையொட்டி முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன. மேலும் மாலையில் கோயிலில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடும், இரவில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT