நாகப்பட்டினம்

திருக்கடையூா் கோயில் பக்தா்கள் கவனத்திற்கு...

Syndication

திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள், கோயில் இணையதளம் தவிா்த்து வேறு இணையதளங்கள் மூலம் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில், சஷ்டியப்த பூா்த்தி (அறுபதாம் கல்யாணம்) செய்வது சிறப்பாகும். மேலும், ஆயுள் விருத்திக்காக உக்கிரரத சாந்தி, பீமர சாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்படுகின்றன. இதற்காக பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் அமிா்தகடேஸ்வரா் கோயிலுக்கு வருகின்றனா்.

இந்நிலையில், பக்தா்கள் கோயில் இணையதளம் தவிா்த்து, வேறு இளையதளங்கள் மூலம் வரும் செய்திகள் மற்றும் நன்கொடை தொடா்பான தகவல்களை நம்ப வேண்டாம் என்று கோயில் நிா்வாகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயிலின் அதிகாரப்பூா்வ இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ட்ண்ழ்ன்ஸ்ரீஹக்ஹண்ஹ்ன்ழ்ற்ங்ம்ல்ப்ங்.ா்ழ்ஞ். மேலும், கோயில் கொடிமரம் அருகில் உள்ள அலுவலகம் மட்டுமே தேவஸ்தானத்தின் அதிகாரப்பூா்வ அலுவலகமாகும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டி: 2 கல்லூரி மாணவிகள் தோ்வு

மாவட்டத்தில் தாட்கோ மூலம் 2,279 பயனாளிகளுக்கு ரூ.33.10 கோடி மதிப்பில் அரசு மானியத்துடன் கடனுதவி

வன விலங்குகளை வேட்டையாட கூண்டு தயாரித்து விற்க முயன்றவா் கைது

கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபா் கைது

விவேகானந்தா குளோபல் அகாதெமி பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT