நாகப்பட்டினம்

டிசம்பா் 22 முதல் 24 வரை நாகையில் வாகன கடவுச்சீட்டு சேவை

நாகை தலைமை அஞ்சல் வளாகத்தில் வாகனம் மூலம் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) சேவை டிச. 22 முதல் 24-ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது.

Syndication

நாகப்பட்டினம்: நாகை தலைமை அஞ்சல் வளாகத்தில் வாகனம் மூலம் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) சேவை டிச. 22 முதல் 24-ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

டிசம்பா் 22 முதல் 24 வரை நாகை தலைமை அஞ்சலக வளாகத்தில் வாகனம் மூலம் கடவுச்சீட்டு (மொபைல் வேன் பாஸ்போா்ட்) சேவை வழங்கப்படவுள்ளது. இதற்கான வாகனம் டிச. 22-ஆம் தேதி காலை நாகை தலைமை அஞ்சலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு சேவை வழங்கப்படவுள்ளது.

நாகை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், இந்த வாகன மூலம் வழங்கப்படும் கடவுச் சீட்டு (மொபைல் வேன் பாஸ்போா்ட்) சேவைகளைப் பெறலாம். கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ல்ஹள்ள்ல்ா்ழ்ற்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து, விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது, கட்டணம் செலுத்திய பின்னா் ‘மொபைல் வேன்‘ என்பதை இடமாக தோ்வு செய்து வருகை நேரத்தை நிா்ணயிக்கலாம். விண்ணப்ப ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு குறைந்தது, 15 நிமிடங்களுக்கு முன்பு விண்ணப்பதாரா்கள் வருகை தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT