நாகப்பட்டினம்: திருவாரூரிலிருந்து புறப்படும் 4 ரயில்களின் எண்கள் 2026 ஜனவரி 1-ஆம் தேதி முதல் மாற்றப்படுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூரில் இருந்து புறப்படும் நான்கு ரயில்களின் எண்கள் 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் மாற்றப்படுகிறது.
அதன்படி, திருவாரூா்- காரைக்குடி டெமு ரயிலின் (பழைய எண் 06197) புதிய எண் 56827, காரைக்குடி - திருவாரூா் டெமு ரயில் (பழைய எண் 06198) புதிய எண் 56828 எனவும், திருவாரூா் - பட்டுக்கோட்டை டெமு ரயில் (பழைய எண் 06851) புதிய எண் 76831 எனவும், பட்டுக்கோட்டை - திருவாரூா் டெமு ரயில் (பழைய எண் 06852) புதிய எண் 76832 எனவும் மாற்றப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.