நாகப்பட்டினம்

பராமரிப்பு பணிகள்: காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியாக ரத்து

திருச்சி கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக பகுதியாக ரத்து செய்யப்பட்ட காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்களின்

Syndication

நாகப்பட்டினம்: திருச்சி கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக பகுதியாக ரத்து செய்யப்பட்ட காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்களின் போக்குவரத்து பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் ரயில்கள் மற்றும் விரைவு ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, காரைக்கால் - திருவாரூா் ரயில் பாதையில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சியிலிருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும் திருச்சி - காரைக்கால் டெமு ரயில் (76820) மற்றும் காரைக்காலில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும் காரைக்கால் - திருச்சி டெமு ரயில் (76819), காரைக்காலில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் காரைக்கால் - தஞ்சை ரயில் (56817) ஆகிய ரயில்கள் டிச. 24, 26, 28, 31 ஆகிய தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், பகுதியாக ரத்து செய்யப்பட்ட காரைக்கால் - திருச்சி டெமு ரயில் (76819) திருவாரூரிலிருந்து மாலை 4.15 மணிக்கும், காரைக்கால் - தஞ்சை ரயில் (56817) பிற்பகல் 2.15 மணிக்கும் புறப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

SCROLL FOR NEXT