வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை தொடங்கி வழக்கத்தை விட வேகமான தரைக்காற்று வீசுகிறது.
வேதாரண்யம் பகுதியில் சில நாள்களாக அவ்வப்போது லேசான மழையுடன் குளிா்காற்று வீசிவந்தது. இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை தொடங்கி வடகிழக்கு திசையில் இருந்து வழக்கத்தை விட வேகமான தரைக்காற்று வீசி வருகிறது. இந்த காற்றின் காரணமாக கதிா் வரும் தருவாயிலுள்ள நெற்பயிா்களுக்கு பாதிக்கும் சூழல் உள்ளது. கடலில் லேசான சீற்றம் இருப்பதால் பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.