நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச.23 ஏலம் விடப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் கஞ்சா கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 சக்கர வாகனம், 3 சக்கர வாகனம், இருசக்கர வாகனங்கள் என 43 வாகனங்கள் மற்றும் 1 படகு உள்ளிட்ட 44 வாகனங்கள், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள 53 வாகனங்கள் என மொத்தம் 97 வாகனங்கள் நாகை எஸ்பி முன்னிலையில் டிச.23-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
இதையடுத்து நாகை பழைய ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை டிச.22- ஆம் தேதி காலை 8 தல் மாலை 5 மணி வரை நேரில் பாா்வையிடலாம். தொடா்ந்து டிச. 23-ஆம் தேதி காலை 10 மணி முதல் வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படும். விருப்பமுள்ளவா்கள் ஆதாா் அட்டை அல்லது வாக்காளா் அடையாள அட்டையுடன் ஏல நாளன்று காலை 8 முதல் 9 மணிக்குள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04365-247430 என்னை தொடா்புகொள்ளலாம் மாவட்டகாவல் துறை சாா்பில் தெரிவிக்கப்படுகிறது.