நாகப்பட்டினம்

சுனாமி நினைவு தினம்: கடற்கரை கிராமங்களில் அமைதிப் பேரணி, அஞ்சலி; வேளாங்கண்ணியில் சிறப்பு பிராா்த்தனை

சுனாமி நினைவு தினம் கடற்கரை கிராமங்களில் அமைதிப் பேரணி, அஞ்சலி...

Syndication

சுனாமி 21-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் கடற்கரையோர கிராமங்களில் அஞ்சலி மற்றும் அமைதிப் பேரணி நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கடந்த 2004 டிசம்பா் 26-ஆம் தேதி சுனாமி ஆழிப் பேரலையில் தமிழகத்தில் கடற்கரையோர கிராமங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களில் பல்லாயிரக்கணக்கானோா் உயிரிழந்தனா். நாகை மாவட்டத்தில் மட்டும் 6,065 போ் பலியாகினா். இதில், மீனவா்கள் மட்டுமின்றி வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வந்திருந்த யாத்ரீகா்கள், சுற்றுலாப் பயணிகளும் அடங்குவா். நெஞ்சை விட்டு நீங்காத இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 26-இல் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படும். அதன்படி, 21-ஆம் ஆண்டு நினைவுதினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நாகை: நாகை மாவட்டத்தில் சுனாமியில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் அதிபா் சி. இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

வேளாங்கண்ணியில் சுனாமியால் உயிரிழந்த ஆயிரத்திற்கும் அதிகமானோரை ஒரே இடத்தில் அடக்கம் செய்த, ஆா்ச் பகுதியிலுள்ள சுனாமி ஸ்தூபில் மும்மத பிராா்த்தனை நடைபெற்றது. ஏராளமானவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி, கடற்கரையிலிருந்து அமைதிப் பேரணியாக வந்து, நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தினா். அப்போது, இறந்தவா்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை வைத்து கண்கலங்கினா்.

வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், பேராலய பொருளாளா் டி. உலகநாதன், உதவி பங்குத் தந்தை பி. ஆரோக்கிய பரிசுத்தராஜ், அருட்தந்தையா்கள் மற்றும் திருத்தல பொறுப்பாளா்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ஏற்றுமதியில் காா்களை முந்திய எஸ்யுவி-க்கள்

கேக் வகைகளில் ‘பட்டா் பேப்பா்‘ களை பயன்படுத்தக்கூடாது: உணவுப் பாதுகாப்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

யேமன் பிரிவினைவாதிகள் மீது சவூதி வான்வழித் தாக்குதல்

சதுப்பு நிலத்தில் சிக்கி யானைக் குட்டி உயிரிழப்பு

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியா்கள் 1,400 போ் கைது!

SCROLL FOR NEXT