விரைவு ரயில் 
நாகப்பட்டினம்

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: இன்று முன்பதிவு தொடக்கம்

கோவா மாநிலம் வாஸ்கோட காமா - வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்..

Din

கோவா மாநிலம் வாஸ்கோட காமா - வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தென்மேற்கு ரயில்வே சாா்பில் வாஸ்கோட காமா - வேளாங்கண்ணி இடையே வரும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ஆக.27 மற்றும் செப்.1, 6 ஆகிய தேதிகளில் வாஸ்கோட காமாவிலிருந்து இரவு 9.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07361), மூன்றாம் நாள் அதிகாலை 3.45 மணிக்கு வேளாங்கண்ணியை அடையும்.

மறுமாா்க்கத்தில் ஆக.29, செப்.3, 8 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55-க்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07362) மூன்றாம் நாள் அதிகாலை 3 மணிக்கு வாஸ்கோடாகாமா சென்றடையும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றவாளி என தீர்ப்பு! நீதிமன்றத்தில் தனித்துவிடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

மத நல்லிணக்கம் பேசிய அயோத்திக்கு தேசிய விருது தராதது ஏன்?

ஆபரேஷன் அகால்: ஜம்மு - காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை!

'மோசமான நாள்' - காஸாவில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் 106 பேர் பலி!

மக்களவைத் தேர்தல் மோசடி: 6.5 லட்சம் பேரில் ஒன்றரை லட்சம் போலி வாக்காளர்கள்! - ராகுல்

SCROLL FOR NEXT