முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் நாளை பிரசாரம்

நாகையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பிரசாரம்..

Updated On : 5 ஏப்ரல், 2026 at 11:39 PM
முதல்வர் மு.க. ஸ்டாலின் - DMK
பகிர்:

நாகை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஏப். 7) பிரசாரம் செய்கிறாா்.

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூா் (தனி) தொகுதிகளில் போட்டியிடும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை நாகையில் நடைபெற உள்ள தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா்.

Advertisement

நாகை ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திமுக தளபதி மாளிகை அருகே கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின், நாகப்பட்டினம் தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா, வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளா் புகழேந்தி, கீழ்வேளூா் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி. லதா ஆகியோரை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கிறாா்.

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை நாகை மாவட்ட திமுகவினா் மற்றும் கூட்டணி கட்சியினா் செய்துவருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments