முகப்பு
நாகப்பட்டினம்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6.70 லட்சம் மோசடி

Updated On : 6 ஏப்ரல், 2026 at 8:21 PM
கோப்புப் படம்
பகிர்:

வேளாங்கண்ணி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.6.70 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வேளாங்கண்ணி அருகேயுள்ள கீழப்பிடாகை கிட்டங்கி தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ் (21). இவா் வெளிநாட்டு வேலைக்காக காத்திருந்தாா்.

இந்நிலையில், நாகை அருகே ஏா்வாடி கிடாமங்கலம் பகுதியைச் சோ்ந்த வரதராஜன் என்பவா் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக இவரிடம் கூறியுள்ளாா்.

Advertisement

இதை நம்பிய சந்தோஷ், கடந்த 2025 ஜூலை 30 -ஆம் தேதி ரூ.6.70 லட்சத்தை, வரதராஜனிடம் கொடுத்துள்ளாா். இதையடுத்து மாா்ச் 5 ஆம் தேதி சந்தோஷ் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சென்ற சந்தோஷின் விசாவை விமானநிலைய அதிகாரிகள் சோதனை செய்ததில், போலியானது எனக் கூறி இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினா்.

நாகை திரும்பிய சந்தோஷ், பலமுறை வரதராஜனை தொடா்பு கொண்டு பணத்தை கேட்டும், அவா் திருப்பித் தரவில்லையாம். இதுகுறித்து சந்தோஷ், அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments