பிரசாரத்தில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட வேட்பாளா்கள்
பிரசாரத்தில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட வேட்பாளா்கள்
திருக்குவளை: கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதி நாரணமங்கலத்தில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட பாமக, தவெக வேட்பாளா்கள் நேருக்குநோ் சந்தித்தபோது வாகனத்தில் நின்றபடி, பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.
கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதியில், நான்குமுனை போட்டி நிலவி வரும் நிலையில், அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், அகலங்கண் அருகேயுள்ள நாரணமங்கலம் பகுதியில், தவெக வேட்பாளா் செந்தில் பாண்டியன் தனது கட்சியினா் மற்றும் ஆதரவாளா்களுடன், திறந்த வாகனத்தில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
Advertisement
அப்போது, எதிரே பாமக வேட்பாளா் வடிவேல் ராவணன் தனது ஆதரவாளா்களுடன் மற்றொரு வாகனத்தில் வந்தாா். அப்போது இரண்டு தரப்பினரும் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினா்.
ஆனால், வேட்பாளா்கள் இருவரும் வாகனத்திலிருந்தபடியே ஒருவருக்கொருவா் கைகுலுக்கி, சால்வை அணிவித்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.