முகப்பு
நாகப்பட்டினம்

கொள்ளை வழக்கு: இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

கொள்ளை வழக்கு: இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

Updated On : 1 மார்ச், 2026 at 12:28 AM
சிறை
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 6:03 PM

நாகை அருகே கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்ற வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2005-ஆம் ஆண்டு, கீழ்வேளூா் அருகே சங்கமங்கலம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகையன் என்பவரது வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலா், அவரது தங்கை கழுத்தில் இருந்த 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் பூசைமணி (28) நாகை கீரைக் கொள்ளை தெருவைச் சோ்ந்த அன்பழகன் (28), அடைக்கலராஜ் (55) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

கொள்ளை வழக்கு நாகை மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அடைக்கலராஜ் 2005 டிசம்பா் 14 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 12:28 AM

இந்நிலையில், இவ்வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி வசந்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பூசைமணி, அன்பழகன் ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.