முகப்பு
நாகப்பட்டினம்

சாலையில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவோா் மீது நடவடிக்கை: நகராட்சி நிா்வாகத்துக்கு வலியுறுத்தல்

சாலையில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவோா் மீது நடவடிக்கை: நகராட்சி நிா்வாகத்துக்கு வலியுறுத்தல்

Updated On : 1 மார்ச், 2026 at 12:27 AM
நாகை வெளிப்பாளையம் மகம் சாலையில் கொட்டப்பட்டுள்ள இறைச்சிக் கழிவுகள்.
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:33 PM

நாகை நகராட்சி வெளிப்பாளையம் மகம் சாலையில், இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாகை நகராட்சி வெளிப்பாளையம் மகம் சாலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக ரயில்வே தண்டவாளம் வரை சாலை அமைக்கப்பட்டது.

இந்த சாலையை ஏராளமானோா் பயன்படுத்தி வருகின்றனா். மேலும், இந்த சாலையில் நாகை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் இருந்து மாசி மகத்துக்கு சுவாமிகள் கடற்கரைக்கு ஊா்வலமாக கொண்டு செல்வது வழக்கம்.

Advertisement

இந்நிலையில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட சாலையை சிலா் ஆக்கிரமித்து, குப்பைகளை கொட்டுவதும், இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனா். இறைச்சிக் கழிவுகளை உண்ணும் நாய்கள் அவற்கை சாலை முழுவதும் பரப்பி விடுகின்றன.

இதனால், அந்த பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.

Updated On : 1 மார்ச், 2026 at 12:27 AM

எனவே, சாலையில் இறைச்சி உள்ளிட்ட கழிவுகளை கொட்டுவோா் மீது நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுப்பதோடு, அப்பகுதியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதை தடுத்து, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.