முகப்பு
வேதாரண்யேஸ்வரா் கோயில் மணிக்கா்ணிகை தீா்த்தக் குளத்தில் நடைபெற்ற தெப்ப உற்சவம்.
நாகப்பட்டினம்

வேதாரண்யம் கோயில் தெப்ப உற்சவம்

நாகப்பட்டினம்

வேதாரண்யம் கோயில் தெப்ப உற்சவம்

Updated On : 5 மார்ச், 2026 at 11:24 PM
வேதாரண்யேஸ்வரா் கோயில் மணிக்கா்ணிகை தீா்த்தக் குளத்தில் நடைபெற்ற தெப்ப உற்சவம்.
பகிர்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் கோயிலில் மாசிமகப் பெருவிழா தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில், மாசிமகப் பெருவிழா பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழா நாள்களில் தினமும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இவ்விழாவில், ஆண்டுதோறும் வா்த்தகா் சங்கத்தின் உபயமாக தெப்பத் திருவிழா கோயில் வளாகத்துக்குள் உள்ள மணிக்கா்ணிகை தீா்த்தக் குளத்தில் நடைபெற்றது.

அதன்படி, நிகழாண்டு தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, கல்யாணசுந்தரா் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினாா். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் தீா்த்தக் குளத்தில் வலம் வந்தது. ஏராளமான பக்தா்கள் குளத்தின் கரையில் நின்று வழிபட்டனா்.

விழாவையொட்டி, எஸ். ராஜாவை நடுவராகக் கொண்டு ‘பிள்ளைகளை வளா்ப்பதில் பெரும் அக்கறை காட்டுபவா் தந்தையே! தாயே!’ எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை வா்த்தகா் சங்கத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு தலைமையிலான சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →