நாகையில் 6.18 டன் புகையிலைப் பொருள்கள் அழிப்பு
நாகையில் 6.18 டன் புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டது.
நாகையில் 6.18 டன் புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 2018 முதல் 2026-ஆம் ஆண்டு வரையில் 26 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 6.18 டன் எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப பொருள்கள் நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாப்பாக பூமியில் புதைத்து முற்றிலும் அழிக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், நாகை கோட்டைவசால் அருகேயுள்ள குப்பைக் கிடங்கில் அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ. 65 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.