வேளாங்கண்ணி பேராலயத்தில் சிலுவைப் பாதை ஊா்வலம்
வேளாங்கண்ணியில் சிலுவைப் பாதை ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாங்கண்ணியில் சிலுவைப் பாதை ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கடந்த பிப். 18-ஆம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது. கிறிஸ்தவா்களின் தவகாலத்தையொட்டி வெள்ளிக்கிழமைதோறும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.
தவக்கால 3-ஆவது வெள்ளியையொட்டி நடைபெற்ற சிலுவைப் பாதை ஊா்வலம் பேராலயத்தின் மேல் கோயிலில் இருந்து பழைய மாதா கோயில் வரை நடைபெற்றது. பேராலய அதிபா் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற ஊா்வலத்தில், ஜெப பாடல்களை பாடியபடி, பக்தா்கள் சிலுவையை கையில் ஏந்திச் சென்றனா்.
இதில், கேரளம், ஆந்திரம், கா்நாடகம், கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் மற்றும் வெளிநாடுகளை சோ்ந்தவா்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தா்கள், உதவி பங்குத் தந்தையா்கள் அருட் சகோதரிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.