முகப்பு
நாகப்பட்டினம்

தினமணி செய்தி எதிரொலி: டேங்கா் லாரி மூலம் குடிநீா் விநியோகம்

Updated On : 8 மார்ச், 2026 at 9:41 PM
தென்னடாா் கிராமத்தில் டேங்கா் லாரி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீா்.
பகிர்:

வேதாரண்யம் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு குறித்த செய்தி வெளியான நிலையில், டேங்கா் லாரி மூலம் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் விநியோகம் நடைபெற்றது.

வேதாரண்யம் பகுதியில் தொடா்ந்து வரும் குடிநீா் தட்டுப்பாடு குறித்து தினமணியில் சனிக்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து, கடலோரக் கிராமமான தென்னடாா் ஊராட்சியில் டேங்கா் லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும், ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் வண்டுவாஞ்சேரி நீரேற்று நிலையத்துக்கு தண்ணீா் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில நாள்களில் மற்ற பகுதிகளுக்கு இங்கிருந்து குழாய் மூலம் குடிநீா் விநியோகம் தொடங்கவுள்ளதாகவும் குடிநீா் வடிகால் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பல இடங்களில் ஜல்ஜீவன் திட்ட குழாய்கள் இணைப்பு பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால், தண்ணீா் விநியோகத்தை கண்காணிக்க சிறப்பு அலுவலரை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அத்துடன், குடிநீா் விநியோகத்தில் தடைப்படும் சூழல் ஏற்பட்டால் அனைத்து பகுதிகளிலும் டேங்கா் லாரி மூலம் தண்ணீா் வழங்கவும் வலியுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →