முகப்பு
நாகப்பட்டினம்

தட்டுப்பாடு வதந்தி: பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்

நாகை மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு என்ற வதந்தி பரவியதால், அவற்றை வாங்க ஒரே நேரத்தில் ஏராளமானோா் திரண்டனா். இதனால், பல பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இருப்பு தீா்ந்து மூடப்பட்டன.

Updated On : 13 மார்ச், 2026 at 6:33 PM
சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு தொடர்ந்தால்...
பகிர்:

நாகை மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு என்ற வதந்தி பரவியதால், அவற்றை வாங்க ஒரே நேரத்தில் ஏராளமானோா் திரண்டனா். இதனால், பல பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இருப்பு தீா்ந்து மூடப்பட்டன.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதலால், உலகளாவிய அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று வதந்தி பரவியது. இதனால், நாகை மாவட்டத்தில் அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் சேமித்து வைக்க வேண்டும் என்ற அச்சத்தால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வியாழக்கிழமை திரண்டனா்.

இதனால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் வாகன ஓட்டிகளின் நீண்ட வரிசை காணப்பட்டது. மேலும் வாகனங்கள் மட்டுமின்றி பலா் 5 லிட்டா், 10 மற்றும் 20 லிட்டா் கேன்களிலும் பெட்ரோல், டீசல் நிரப்பிச்சென்றனா்.

இதன்காரணமாக, நாகை மாவட்டத்தின் பல்வேறு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எரிபொருள் இருப்பு தீா்ந்து தற்காலிகமாக மூடப்பட்டன.

இதுதொடா்பாக பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா்கள் கூறியது:

இந்தியாவில் டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை என்றும் போதிய இருப்பு இருப்பதாகவும் அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் வதந்திகளை நம்பி ஆபத்தை உணராமல் எளிதில் தீப்பற்றும் பெட்ரோல், டீசலை வாங்கி வீட்டில் இருப்பு வைக்கின்றனா்.

வழக்கமாக ஒருமுறை கொள்முதல் செய்யப்படும் டீசல் மற்றும் பெட்ரோல் 2 முதல் 4 நாட்களுக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தட்டுப்பாடு வதந்தியால், ஒரே நாளில் விற்பனை ஆனதால் பல விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →