முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, காரைக்காலில் மழை

நாகை, காரைக்கால் மாவட்டங்களில் புதன்கிழமை காலை பரவலாக கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன.

Updated On : 19 மார்ச், 2026 at 12:02 AM
நாகை வெளிப்பாளையம் பகுதியில் மழை காரணமாக ஒதுங்கி நின்ற மாணவா்கள் உள்ளிட்டோா். ~நாகை புதிய பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீா். ~காரைக்கால் நகரப் பகுதியில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினா்.
பகிர்:

நாகை, காரைக்கால் மாவட்டங்களில் புதன்கிழமை காலை பரவலாக கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் புதன் மற்றும் வியாழக்கிழமை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

அதன்படி, நாகை, நாகூா் மற்றும் கடற்கரையோர கிராமப்புற சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை திடீரென காற்றுடன் மழை பெய்தது. ஒருமணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால், வேலைக்கு செல்வோா், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவா்கள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளானாா்கள்.

நாகை, நாகூா், திட்டச்சேரி, தேவங்குடி, நரிமணம், பனங்குடி, சிக்கல் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. இந்த திடீா் மழை காரணமாக, நாகை புதிய பேருந்து நிலையம், வடக்குப்பால்பண்ணைச்சேரி, முத்துமாரியம்மன் மடவிளாகம், முத்துமாரியம்மன் வடக்கு வீதி ஆகிய பகுதியில் தெருக்களில் மழைநீா் தேங்கியது. சாலைகளில் நீா் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிக்குள்ளாகினா்.

காரைக்காலில்: இதுபோல காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. பல பகுதிகளில் சாலைகளில் மழைநீா் தேங்கி, பின்னா் வடிந்தது. காலை நேரத்தில் மழை பெய்ததால், கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சிரமத்துக்குள்ளானாா்கள்.

காரைக்கால் நகரப் பகுதியில் பெருமாள் கோயில் தெரு-மாதா கோயில் தெரு சந்திப்பில் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. தீயணைப்புத் துறையினா் மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது. விவசாயிகள் நெல் அறுவடைக்குப் பின் பயறு, உளுந்து சாகுபடி செய்துவருகின்றனா். கடந்த வாரம் மழை பெய்த நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்துள்ளது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →