முகப்பு
நாகப்பட்டினம்

பேரவைத் தோ்தல்: கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சட்டப் பேரவைத் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது குறித்து...

Updated On : 23 மார்ச், 2026 at 10:18 PM
நாகை அரசுக் கல்லூரியில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில், அணிவகுத்து நின்ற மாணவ-மாணவியா்.
பகிர்:

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சட்டப் பேரவைத் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தோ்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இத்தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவ-மாணவியா் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலா் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், மாணவ-மாணவியா் எழுத்துகள் மற்றும் எண்களின் வடிவில் அணிவகுத்து நின்றனா்.

மேலும் சட்டப் பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குககள் பதிவாக உதவியாக இருப்பேன் என்று உறுதிமொழி ஏற்றனா்.