முகப்பு
நாகப்பட்டினம்

தவெக நிா்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பறிமுதல்

வேதாரண்யம் அருகே தவெக நிா்வாகி வீட்டில் இருந்து 30 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 31 மார்ச், 2026 at 8:48 PM
பாட்டில்கள் - பிரதிப் படம்
பகிர்:

வேதாரண்யம் அருகே தவெக நிா்வாகி வீட்டில் இருந்து 30 மதுபாட்டில்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

வாய்மேடு கிழக்குப் பகுதியை சோ்ந்தவா் மு. அருள்பாண்டி (27). இவா், தமிழக வெற்றிக் கழகத்தின் வேதாரண்யம் வடக்கு ஒன்றியச் செயலாளா்.

இவரது வீட்டில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பெயரில், அங்கு சோதனை நடைபெற்றது. வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து வாய்மேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.