திருவாரூர்

திருக்கொடியலூரில் 19-இல் சனிப்பெயர்ச்சி விழா

DIN

திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரம் அருகேயுள்ள திருக்கொடியலூரில் வரும் 19-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.
திருக்கொடியலூரில் உள்ளது அகத்தீஸ்வரர் கோயில். இக்கோயில் சனீஸ்வர பகவான் பிறந்த தலமாக கருதப்படுகிறது.
அகத்தியர் சிவபூஜை செய்த தலமாக இருப்பதால், இங்கு வரும் பக்தர்களும், சிவனடியார்களும் ஸ்ரீ சனீஸ்வர பகவானின் கடுமையான பார்வையிலிருந்து நீங்க அகத்தீஸ்வரரே பைரவர் கோலத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவானின் எதிரே நின்று தோஷத்தை நீக்கி நற்பலன்களை பெருகச் செய்யும் தலமாக விளங்குகிறது.
 ஏழரைநாட்டு சனி, அஷ்டமத்து சனி, சனிதோஷம் இருப்பவர்கள் இவ்வாலயத்தில் இருக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு ஹோமம், அபிஷேகம், கருப்பு வஸ்திரம் சாற்றி, தீபம் ஏற்றி, எள் சாதம் நைவேத்தியம் செய்து அர்ச்சனை செய்தால் சகல தோஷங்களும் நீங்கி நன்னை ஏற்படும் என்பது ஐதீகம். 
ஸ்ரீ சனீஸ்வர பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு வரும் 19-ஆம் தேதி காலை 10.01 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். இதையொட்டி, இக்கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT