கர்ப்பக் கால பரிசோதனை நுட்பங்கள் கருத்தரங்கம்
திருவாரூரில் உள்ள இந்திய மருத்துவக் கழக சங்க அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையின் சார்பில், அரசு மற்றும் தனியார்
திருவாரூரில் உள்ள இந்திய மருத்துவக் கழக சங்க அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையின் சார்பில், அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு கர்ப்பக் கால ஸ்கேன் பரிசோதனை நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் பங்கேற்று, கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியது: கருத்தரங்கின் நோக்கம், ஸ்கேன் மைய உரிமையாளர்கள் மற்றும் ஸ்கேன் பரிசோதனை, மருத்துவர்கள் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதே. ஸ்கேன் பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யும்போது கர்ப்பிணி பெண்களிடமோ, உடன் உள்ளவர்களிடமோ பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரியப்படுத்தக் கூடாது என்ற சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும். மேலும், மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான தீத் தடுப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த பயிற்சியை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இது பேரிடர் காலங்களில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளைப் பாதுகாக்க பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.
பின்னர், தீத் தடுப்பு மற்றும் மீட்புப் மணிகள் குறித்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்வில் இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்) எஸ். செந்தில்குமார், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) எம். செந்தில்குமார் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.