சந்தானராமர் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச.29) வைகுண்ட ஏகாதசியையொட்டி, அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.
நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச.29) வைகுண்ட ஏகாதசியையொட்டி, அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.
சந்தானராமர் கோயில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதரால் பாடல் பெற்றது. இக்கோயிலில் சந்தானகோபால ஜெபம் செய்து சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமரை வழிபட்டால் புத்திரப் பாக்கியம் இல்லாதவர்கள் அப்பேற்றினை அடைவார்கள் என்பது ஐதீகம்.
இக்கோயிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல் பத்து உத்ஸவம் டிச. 19- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
வைகுண்ட ஏகாதசி: இக்கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச.29) அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. அப்போது, சீதா லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர் சொர்க்கவாசல் திறப்பில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு முதல் ராப்பத்து உத்ஸவம் தொடங்குகிறது. இதேபோல், ஆலங்குடி அபயவரதராஜர் பெருமாள் கோயில், நீடாமங்கலம் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளிட்ட வைணவக் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.