திருவாரூர்

குளங்கள் தூர்வாரும் பணி தீவிரம்

DIN

குடவாசல் வட்டத்தில் குளங்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் தற்போது 110 குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சிவக்குமார் கூறியது: குடவாசல் வட்டத்தில் உள்ள 170 குளங்களில் அரசு சட்ட விதிகளுக்கு உள்பட்டு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 13 குளங்கள் இயந்திரங்களின் உதவியுடனும், 97 குளங்கள் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழும் தூர்வாரப்படுகின்றன. இந்த குளங்களிலிருந்து எடுக்கப்படும் வண்டல் மண் விவசாயப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வரை 790 விவசாயிகள் தங்கள் விளை நிலத்துக்காக வண்டல் மண்ணை அள்ளிச் சென்றுள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT