திருவாரூர்

விளையாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

DIN

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு நாளில் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்ட பள்ளிகளிலிருந்து 60 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 15 நாள்களுக்கு திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருப்பிடப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
மே 2 முதல் 16 ஆம் தேதி வரை காலை, மாலை நேரங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. முகாமில் பங்குபெற்ற நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியருக்கு தடகளம், ஹாக்கி, டேக் வாண்டோ, வாலிபால், நீச்சல் மற்றும் யோகா பயிற்சியளிக்கப்பட்டன
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, யோகா பயிற்றுனர் பட்டாபிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு சீருடை, சான்றிதழ் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT