திருவாரூர்

ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை கேட்டு அதிக விண்ணப்பம்

DIN

குடவசல் வட்டாட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்று வரும் ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை கோரி அதிக மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
குடவாசல் வட்டாட்சியர் அவலகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. தினமும் 10 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்கள் அளித்து வருகின்றனர். இந்த மனுக்களை திருவாரூர் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி நேரிடையாக பெற்று அதன்மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில், 7-ஆவது நாளான வெள்ளிக்கிழமை செல்லூர் உள்ளிட்ட 10 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.  ஜமாபந்தி தொடங்கிய நாளிலிருந்து இதுவரை சுமார் 400-க்கும் அதிகமான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் முதியோர் உதவித் தொகை கேட்டு அளிக்கப்பட்டுள்ளதாக குடவாசல் வட்டாட்சியர் அன்பழகன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT