திருவாரூர்

ஆதிரெங்கம் வேளாண் பண்ணையில் மாணவிகளுக்குப் பயிற்சி

DIN

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை வேளாண் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வேளாண் கல்லூரி மாணவியருக்கு இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய நெல் குறித்து ஒரு வாரக் கால பயிற்சி நடைபெற்றது.  
 நவ. 7- ஆம் தேதி தொடங்கிய இப்பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கிரியேட் நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் பங்கேற்றுப் பேசியது:
உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக இருப்பது பருவ நிலை மாற்றம். இதன் காரணமாக மழையின் அளவு முழுமையாக பெய்தாலும் ஒரு குறிப்பிட்ட நாள்களுக்குள்ளாகவே பெய்து பயிர் சேதத்தை ஏற்படுத்தி கடலுக்கு சென்று விடுகிறது.
தமிழக அரசு கடந்த இருபது ஆண்டுகளில் தூர்வாரும் பணி மேற்கொண்டதில் மிகப்பெரிய தோல்வியைக் கண்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், விவசாயிகள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு, இயற்கை வேளாண்மையும், பாரம்பரிய நெல் சாகுபடியும் மட்டுமே பயன் அளிக்கும் என்றார்.
நிகழ்ச்சியில், இயற்கை வேளாண்மை, பாரம்பரிய நெல் சாகுபடி, பாரம்பரிய கால்நடைகள் வளர்ப்பு, பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப சாகுபடி தொழில்நுட்பங்களை மேற்கொள்வதன் அவசியம்  உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில்  இயற்கை வேளாண் வல்லுநர்கள் கொருக்கை ஜானகிராமன், ஓவர்குடி பரமசிவம், திருத்துறைப்பூண்டி கரிசாலன், தலைஞாயிறு சோமு இளங்கோ ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சியில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT