திருவாரூர்

நீடாமங்கலத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: ஆட்சியர் ஆய்வு

DIN

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர் டெங்கு காய்ச்சல் தொடர்பாக நீடாமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, நீடாமங்கலம் உழவர் சந்தை எதிரில் சிலர் மது புட்டிகளை காலை 9 மணியளவில் விற்பனை செய்து கொண்டிருந்தனராம். அதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர், 11 மது புட்டிகள், ரூ. 4,295 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீடாமங்கலம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.
பின்னர், நீடாமங்கலம் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT