தந்தை திட்டியதால் மகன் தற்கொலை
திருவாரூர் அருகே தந்தை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர் அருகே தந்தை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர் அருகேயுள்ள சலிப்பேரி, ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (45). இவரது மகன் அருண்குமார் (19).
அருண்குமார் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தாராம். இதனால், அவரது தந்தை கண்டித்ததாகத் தெரிகிறது.
இதனால், மன உளைச்சலில் இருந்த அருண்குமார், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து, நன்னிலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.