வணிக வளாக மேலாளரைத் தாக்கியவருக்கு வலை
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வணிகவளாக மேலாளரைத் தாக்கியவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வணிகவளாக மேலாளரைத் தாக்கியவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
நாச்சிக்குளம் அரகாசு அம்மா தர்கா தெருவைச் சேர்ந்த கமாலுதீன் மகன் மைதீன் அப்துல் காதர் (38). இவர் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் கடை வைத்திருக்கும் துளைசியாப்பட்டினம் முகமது இக்பால் மகன் சிராஜூதீனுக்கும் (39) முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில், திங்கள்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், மைதீன் அப்துல் காதரை சிராஜூதீன் தாக்கினாராம். இதில் காயமடைந்த மைதீன் அப்துல் காதர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, சிராஜூதீனை தேடிவருகின்றனர்.