பேருந்து கட்டண உயர்வு: தமிழர் தேசிய முன்னணி ஆர்ப்பாட்டம்
பேருந்து கட்டணத்தை முழுமையாத் திரும்பப் பெற வலியுறுத்தி, மன்னார்குடியில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேருந்து கட்டணத்தை முழுமையாத் திரும்பப் பெற வலியுறுத்தி, மன்னார்குடியில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி மேலராஜவீதி, தந்தை பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலர் ச. கலைச்செல்வம் தலைமை வகித்தார்.
தமிழக அரசு உயர்த்தியுள்ள பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். போக்குவரத்துக் கழகத்தில் நடைபெறும் ஊழலை தடுத்து நிறுத்த வேண்டும்.
மத்திய அரசு, மாநிலப் போக்குவரத்துக் கழகத்துக்கு வருமான வரி விதிக்கக் கூடாது. மாநில அரசு வாங்கும் பெட்ரோலியப் பொருள்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரியை நீக்க வேண்டும், அரசுப் பேருந்துகளுக்கு, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
கட்சியின் மாவட்டத் தலைவர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், மாவட்டத் துணைத் தலைவர் சி. சபேசன், தமிழ்த் தேசியப் பேரியக்க நிர்வாகி ரெ.செயபால் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் மாவட்டப் பொருளாளர் ரா. பாரதிதாசன், மாவட்ட துணைத் தலைவர் ஆ. அரிகரன், மாவட்ட இளைஞரணித் தலைவர் ரா. ராசசேகரன், நகரத் தலைவர் ச. மகேந்திரன், நகரச் செயலர் மு.கணேசன், மாவட்ட உழவர் அணி நிர்வாகி அழகிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.