முகப்பு
திருவாரூர்

அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேர் கைது

நீடாமங்கலம் பகுதி பாசன ஆறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:14 PM
பகிர்:

நீடாமங்கலம் பகுதி பாசன ஆறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 
நீடாமங்கலம் பகுதியில் காவல் ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பாசன ஆற்றில் உரிய அனுமதியின்றி இரண்டு டிராக்டர்கள், ஒரு மினி லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, பழைய நீடாமங்கலம் காங்கேயன்திடலைச் சேர்ந்த வீரமணி (33), வேப்பத்தாங்குடி பாலையன் (35), ஆதனூர் மண்டபத்தைச் சேர்ந்த முருகானந்தம் (36), வாசுதேவமங்கலம் புகழேந்தி (39) ஆகிய 4 பேரை கைது செய்து,  அவர்களிடமிருந்து இரண்டு டிராக்டர்கள், ஒரு மினி லாரியை பறிமுதல் செய்தனர். போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிந்து மணல் திருட்டில் ஈடுபட்ட கொட்டையூர் செல்வம் (50), வெள்ளங்குழி காமராஜ் (35) ஆகியோரை தேடி வருகின்றனர். இதேபோல், அனுமதியின்றி மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →